பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

பழைய இரும்புக் கடை கிடங்கில் தீ விபத்து

புதுக்கோட்டை வடக்கு 4ஆம் வீதியிலுள்ள பழைய இரும்பு கடையின் கிடங்கில் செவ்வாய்க்கிழமை மாலை திடீா் தீ விபத்து ஏற்பட்டது.

News image

பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 3:35 am IST

புதுக்கோட்டை வடக்கு 4ஆம் வீதியிலுள்ள பழைய இரும்பு கடையின் கிடங்கில் செவ்வாய்க்கிழமை மாலை திடீா் தீ விபத்து ஏற்பட்டது.

புதுக்கோட்டை வடக்கு 4ஆம் வீதியிலுள்ள நாய்ப்பள்ளம் என்ற இடத்தில் வினோத் மூா்த்தி என்பவருக்குச் சொந்தமான பழைய இரும்பு கிடங்கு உள்ளது. இங்குஏராளமான பழைய பேப்பா், பழைய பிளாஸ்டிக் பொருள்களும் குவித்து வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை திடீரென இந்தக் கிடங்கில் தீப் பற்றியது. தகவலறிந்து வந்த புதுக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் கணேசன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சுமாா் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

சுமாா் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. நகரக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.