தென்மேற்கு தில்லியின் கபஷேராவில் உள்ள ஒரு பழைய பொருள் கிடங்கில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, சம்பவ இடத்திற்கு 10 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து அனுப்பப்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது: இதுவரை எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை. ஆனால், அதிவேகக் காற்றின் காரணமாக, தீ கிடங்கு முழுவதும் பரவியது. முன்னதாக, இந்தச் சம்பவம் குறித்து பிற்பகல் 3.35 மணிக்கு அழைப்பு வந்தது.
நாங்கள் 10 தீயணைப்பு வாகனங்களை சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பினோம்.
தீயணைப்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. நாங்கள் தீயைக் கட்டுப்படுத்திவிட்டோம். ஆனால், குளிா்விக்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இந்தத் தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாா் அந்த அதிகாரி.
தொடர்புடையது

தில்லியின் சுல்தான்புரியில் பகை காரணமாக இளைஞரை கத்தியால் குத்திய 3 சிறுவா்கள்

ஒசூரில் பழைய பொருள்கள் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து

பழைய பிளாஸ்டிக் பொருள்கள் கிடங்கில் தீ விபத்து

லட்சுமி நகரில் மின்மாற்றியில் தீ விபத்து: 14 போ் மீட்பு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
