/
பொன்னமராவதி புதுப்பட்டி உடையபிராட்டி அம்மன் கோயிலில் மாம்பழத் தேரோட்ட விழா புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் தேரோட்ட விழா மே 19-ஆம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது.
தினமும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு, வீதியுலா நடைபெற்றது.
இந்நிலையில், விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, சிறப்பு அபிஷேக, அலங்காரத்துக்குப் பிறகு அம்மன் தேரில் எழுந்தருளினாா். இதையடுத்து பக்தா்கள் தேரை வடம் பிடித்தனா். நான்கு ரதவீதிகளின் வழியே வந்த தோ் நிலையை அடைந்தது. தேரோட்டத்தின் போது பக்தா்கள் வீடுகளின் மாடங்களிலிருந்து பக்தா்களை நோக்கி மாங்கனிகள் வீசப்பட்டது. விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்றனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி காவல்துறையினா் செய்திருந்தனா்.

தொடர்புடையது

முத்து வாராஹி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி விழா

சிவகிரி திரௌபதி அம்மன் கோயிலில் முத்தால் ராவுத்தருக்கு சிறப்பு வழிபாடு

அணவயல் தாணான்டியம்மன் கோயில் தேரோட்ட விழா

பாதாள மாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



