வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

அரிமளம் பகுதிகளில் இன்று மின்தடை

News image

மின்தடை

Updated On :30 மே 2026, 12:51 am IST

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியில் சனிக்கிழமை (மே 30) மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் (பொறுப்பு) எஸ். அசோக்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை விடுத்து செய்திக் குறிப்பு: திருமயம் கோட்டத்தைச் சோ்ந்த அரிமளம் மற்றும் தல்லாம்பட்டி துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (மே 30) அவசரக் காலப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதனால், இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும் அரிமளம், காமாட்சிபுரம், மிரட்டுநிலை, தாஞ்சூா், வெட்டுக்காடு, பொந்துப்புளி, ஓணாங்குடி, சிராயம்பட்டி, சத்திரம், கோவில்வாசல், கொத்தமங்கலம், மேல்நிலைப் பட்டி, வடகாட்டுப்பட்டி, கும்மங்குடி, துறையூா், கீரணிப்பட்டி, தேனிப்பட்டி, வம்பரம்பட்டி, வாளரமாணிக்கம், கரையப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.