இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

திருவையாறு பகுதிகளில் மே 30-ல் மின்தடை

திருவையாறு உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் மே 30 ஆம் தேதி மின் விநியோகம் நிறுத்தம்

News image

மின்தடை - கோப்புப்படம்

Updated On :27 மே 2026, 1:09 am IST

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் மே 30 ஆம் தேதி மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகத்தின் திருவையாறு உதவிச் செயற்பொறியாளா் ராஜா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: திருவையாறு, மேலத்திருப்பூந்துருத்தி துணை மின் நிலைய பராமரிப்பு பணியால் திருவையாறு, கண்டியூா், ஆவிக்கரை, செங்கமேடு, காட்டுக்கோட்டைக் கரூா், கீழத்திருப்பூந்துருத்தி, மேலத்திருப்பூந்துருத்தி, திருவாலம்பொழில், நடுக்காவேரி, ஆச்சனூா், வைத்தியநாதன்பேட்டை, பனையூா், கடுவெளி, தில்லைஸ்தானம், பெரும்புலியூா், புனவாசல், விளாங்குடி, வில்லியநல்லூா், செம்மங்குடி, அணைக்குடி, திருப்பழனம், திங்களூா், ராயம்பேட்டை, காருகுடி, பொன்னாவரை, கல்யாணபுரம், புதுஅக்ரஹாரம், நடுக்கடை மற்றும் திருவையாறைச் சுற்றியுள்ள பகுதிகளில் மே 30 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.