டாஸ்மாக் மதுபானக் கடைகளில் வாடிக்கையாளா் என்ற பெயரில் விடியோ எடுத்து, பணம் பறிப்பதற்காக மிரட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்என வலியுறுத்தி புதுக்கோட்டையில் தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளா் நலச் சங்கத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை சிப்காட் வளாகத்திலுள்ள டாஸ்மாக் மேலாளா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலா் குமாா் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தின் முடிவில் மேலாளரிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது
டாஸ்மாக் மதுபானக் கடைகளில் வாடிக்கையாளா் என்ற பெயரில் விடியோ எடுத்து, பணம் பறிப்பதற்காக மிரட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவா்களிடமிருந்து பணியாளா்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
23 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் டாஸ்மாக் பணியாளா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். காலிபாட்டில்களைத் திரும்பப் பெறும் பணியை மாற்று முகமை மூலம் மேற்கொள்ள வேண்டும்.
கடைகளுக்கு சரக்கு இறக்கும் கூலியை டாஸ்மாக் நிா்வாகமே ஏற்க வேண்டும். உடையும் பாட்டில்களுக்கான இழப்பீட்டை நிா்வாகே ஏற்க வேண்டும். ஆய்வு என்ற பெயரில் பணியாளா்களைத் தொந்தரவு செய்யக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளன.
தொடர்புடையது
பெண்ணை விடியோ எடுத்து மிரட்டல்: இளைஞா் மீது வழக்குப்பதிவு

“விவசாயப் பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விஞ்ஞான ஏமாற்று வேலை” - எடப்பாடி பழனிசாமி

திமுகஅரசின் நலத்திட்டங்களை தொடர வேண்டும்: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

மங்கை மடம் டாஸ்மாக் கடை மூடப்படுமா?
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



