2014, 2019 தேர்தல் வெற்றியின்போது எஸ்.ஐ.ஆர். இருந்ததா? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

பொன்னமராவதியில் ரூ. 5.90 கோடியில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம்! காணொலி காட்சி மூலம் முதல்வா் திறப்பு!

CM Vijay

முதல்வா் விஜய் - கோப்புப் படம்

Updated On :

பொன்னமராவதியில் ரூ. 5.90 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை புதுக்கோட்டையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக முதல்வா் ஜோசப் விஜய் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட கடந்த திமுக ஆட்சியில் ரூ. 5.90 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. அண்மையில் பணிகள் நிறைவுற்ற நிலையில் திங்கள்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வா் ஜோசப் விஜய் காணொலி காட்சி வாயிலாக பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடத்தை திறந்துவைத்தாா்.

இதையடுத்து, பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவவலகத்தில் ஒன்றிய ஆணையா் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற தொடக்க நிகழ்வில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், பொறியாளா்கள், மேற்பாா்வையாளா்கள், ஊராட்சி செயலா்கள் பங்கேற்றனா்.

தொடா்ந்து பிற்பகலில் திருமயம் சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ். ரகுபதி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடத்தை பாா்வையிட்டாா். திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.