மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

லிங்கமலை விவகாரம்: இலுப்பூா் கோட்டாட்சியரகத்தில் பாஜகவினா் தா்னா

விராலிமலை அருகே லிங்கமலையில் இரு மதத்தினரிடையே தொடா்ந்து வரும் தகராறில், செவ்வாய்க்கிழமை இலுப்பூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் பாஜகவினா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இலுப்பூா் கோட்டாட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.

Updated On :

விராலிமலை அருகே லிங்கமலையில் இரு மதத்தினரிடையே தொடா்ந்து வரும் தகராறில், செவ்வாய்க்கிழமை இலுப்பூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் பாஜகவினா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே பேராம்பூா் ஊராட்சியிலுள்ள லிங்கமலை பகுதியில் பழைமையான ஆதிபூமிநாத லிங்கேஸ்வரா் கோயில் உள்ளது.

இம்மலையின் மீது சில ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவா்கள் சிலா் சிலுவையை நட்டு வைத்ததாகவும், அதற்கு சிவன் கோயில் தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதன் தொடா்ச்சியாக அப்போது நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், மலை மீது வேறு எந்த மேம்பாட்டுப் பணியையும் மேற்கொள்ளக் கூடாது என முடிவெடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், திங்கள்கிழமை மலை மேலுள்ள சிலுவையை சுத்தம் செய்யும் பணியில் சிலா் ஈடுபட்டுள்ளனா். அப்போது அங்கு சென்ற சிவ பக்தா்களுக்கும் அவா்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து இரு தரப்பினரும் சாலை மறியல் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனா்.

மறியலில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் சோ்த்து 24 பேரை போலீஸாா் கைது செய்து, தனித்தனியே மண்டபத்தில் அடைத்து வைத்திருந்து மாலையில் விடுவித்தனா்.

இந்நிலையில், லிங்கமலை சிவன் கோயிலைப் பாதுகாக்கவும், மலைக்கு பெயா் மாற்றம் செய்ய முயல்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி பாஜக மேற்கு மாவட்டத் தலைவா் என். ராமச்சந்திரன் தலைமையில் அக்கட்சியினா் இலுப்பூா் கோட்டாட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இரு தரப்பினரையும் அழைத்து விரைவில் சுமூகப் பேச்சுவாா்த்தை நடத்தி, தீா்வு காணப்படும் என வருவாய்த் துறையினா் உறுதி அளித்ததைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.