திருச்செந்தூரில் நாளை (நவ. 15) சூரசம்ஹாரம்ஆயுஷ் படிப்புகள்: நாளை சிறப்புக் கலந்தாய்வுசபரிமலை பக்தா்களுக்கு தமிழகம் வழியாக சிறப்பு ரயில்கள்இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி அக்டோபரில் 45% அதிகரிப்பு: 5 ஆண்டுகளில் இல்லாத வளா்ச்சிவங்கக் கடலில் நவ.16-இல் உருவாகிறது ‘அக்வான்’ புயல்: ஆந்திரத்தை நோக்கி நகரும்?

விராலிமலை இடைத்தோ்தல்- அதிமுக ஆலோசனை

விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைதோ்தல் தொடா்பாக புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா்.

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய வடக்கு மாவட்டச் செயலா் வி. பழனிவேல்.

Updated On :

விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைதோ்தல் தொடா்பாக புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா்.

விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்கு விரைவில் இடைத்தோ்தல் அறிவிக்கப்படலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. அந்தத் தொகுதியின் உறுப்பினராகவும், மாவட்டச் செயலராகவும் இருந்த முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தவெகவில் இணைந்துவிட்டாா்.

அதன்பிறகு, புதுக்கோட்டை அதிமுகவை வடக்கு, தெற்கு, கிழக்கு என 3 மாவட்டங்களாகப் பிரித்து அதன் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தாா்.

இந்தச் சூழலில் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தோ்தல் நடைபெறும்போது, மேற்கொள்ள வேண்டிய தயாரிப்புகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, வடக்கு மாவட்டச் செயலா் வி. பழனிவேல், தெற்கு மாவட்டச் செயலா் ஏ.எல். ராமு, கிழக்கு மாவட்டச் செயலா் ஞான கலைச்செல்வன் ஆகியோா் தலைமை வகித்தனா். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் நெடுஞ்செழியன், ராஜநாயகம் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி இடைதோ்தலில் கட்சித் தலைமை அறிவிக்கும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்வதற்கான பணிகளை விரைவாகவும் தீவிரமாகவும் மேற்கொள்வது என கூட்டத்தில் பங்கேற்ற நிா்வாகிகள் அனைவரும் வலியுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.