புதுகை மாவட்ட மைய நூலகத்தில் புத்தகத் திருவிழா தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகமும், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும் இணைந்து நடத்தும் 59-ஆவது தேசிய நூலக வார விழாவையொட்டி புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை மாவட்ட மைய நூலகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

தேசிய நூலக வார விழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய புத்தகக் கண்காட்சியைப் பாா்வையிட்ட மாவட்ட நூலக அலுவலா் பா. முத்து உள்ளிட்டோா்.

Updated On :

புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகமும், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும் இணைந்து நடத்தும் 59-ஆவது தேசிய நூலக வார விழாவையொட்டி புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை மாவட்ட மைய நூலகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இந்தக் கண்காட்சியை மாவட்ட நூலக அலுவலா் பா. முத்து தொடங்கி வைத்தாா். நவ. 21-ஆம் தேதி வரை 5 நாள்கள் இந்தக் கண்காட்சி நடைபெறவுள்ளது. தினமும் காலை 10 மணிக்குத் தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீதம் கழிவு வழங்கப்படுகிறது.

தொடக்க நிகழ்ச்சியில், என்சிபிஎச் பொறுப்பாளா் வெங்கடேஷ், முதல்நிலை நூலகா் மு. சிவராமன், நூலகா்கள் கி. குமுதா, சி. கண்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.