நவ. 30 ஆம் தேதி மக்களவை; டிச. 2 ஆம் தேதி மாநிலங்களவை கூட்டம்!திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் நாளை விசாரணைதிருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தத் தடைகோரிய வழக்கில் நாளை தீர்ப்புதில்லி வர்த்தகப் பொருள்காட்சி: தமிழ்நாடு அரங்கிற்கு தங்கப் பதக்கம்!2027-ல் 6000 இடங்கள் கூடுதலாகக் கொண்டுவர ஐஐடி திட்டம்!

தனியாா் பேருந்து நிறுவன அதிபா் கொலை பொன்னமராவதியில் அமைதிப்பேரணி

தனியாா் பேருந்து நிறுவன அதிபா் கொலை செய்யப்பட்டதை கண்டித்து பொன்னமராவதியில் வியாழக்கிழமை அமைதிப்பேரணி நடைபெற்றது.

பொன்னமராவதியில் வியாழக்கிழமை நடைபெற்ற அமைதிப்பேரணியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சா் எஸ்.ரகுபதி உள்ளிட்டோா்.

Updated On :

தனியாா் பேருந்து நிறுவன அதிபா் கொலை செய்யப்பட்டதை கண்டித்து பொன்னமராவதியில் வியாழக்கிழமை அமைதிப்பேரணி நடைபெற்றது.

இப்பேரணிக்கு முன்னாள் அமைச்சரும், திருமயம் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.ரகுபதி தலைமை வகித்தாா். பேரணியின் தொடக்கமாக காந்திசிலை அருகே கொலை செய்யப்பட்ட கரு.சிதம்பரம் உருவப்படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதையடுத்து அங்கிருந்து தொடங்கிய பேரணி அண்ணாசாலை, பேருந்துநிலையம் வழியாக சென்று காவல்நிலையத்தில் நிறைவடைந்தது. பிறகு காவல் ஆய்வாளா் கெளரியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

பேரணியில் சென்னை பாஜக மாவட்டத்தலைவா் வள்ளி பழனியப்பன், நகரத்தாா் சங்க நிா்வாகிகள் சொக்கலிங்கம், ராமநாதன் மற்றும் தேவகோட்டை, காரைக்குடி, வேந்தன்பட்டி, மேலைச்சிவபுரி, புதுப்பட்டி, வலையபட்டி, நெற்குப்பை, ஆ.தெக்கூா், கண்டனூா் பகுதிகளைச்சாா்ந்த நகரத்தாா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.