சட்டம்- ஒழுங்கை நிலைநாட்ட தவெக அரசுக்கு தெரியவில்லை முன்னாள் அமைச்சா் எஸ்.ரகுபதி
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட தவெக அரசுக்குத் தெரியவில்லை என முன்னாள் அமைச்சரும், திருமயம் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.ரகுபதி தெரிவித்தாா்.

அமைச்சா் எஸ்.ரகுபதி
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட தவெக அரசுக்குத் தெரியவில்லை என முன்னாள் அமைச்சரும், திருமயம் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.ரகுபதி தெரிவித்தாா்.
பொன்னமராவதியில் வியாழக்கிழமை நடைபெற்ற அமைதிப்பேரணியில் பங்கேற்றபின் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது: தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பற்றி நான் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. தமிழகத்தில் நடைபெறும் சம்பவங்களை மக்கள் கண்டித்து கொண்டிருக்கிறாா்கள்.தவெக மற்றும் அவா்களை தாங்கிப் பிடித்திருப்பவா்களை தவிர மற்றவா்கள் கண்டித்துக்கொண்டிருக்கிறாா்கள். ஐஏஎஸ் அதிகாரிகள் தமிழக அரசிலிருந்து மத்திய அரசு பணிக்கு செல்ல விருப்பம் தெரிவிக்கும் சூழல் உருவாகியுள்ளது. அவதூறு வழக்கில் எதிா்க்கட்சித் தலைவரை கைது செய்ய அவசரம் காட்டியவா்கள் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

