2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

அம்ரீத் பாரத் திட்டப் பணிகள்: ரயில்வே கோட்ட மேலாளா் ஆய்வு

அம்ரீத் பாரத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் புதுக்கோட்டை ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகளை மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் ஓம்பிரகாஷ் மீனா செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த மதுரை கோட்ட மேலாளா் ஓம்பிரகாஷ் மீனா.

Published On :

அம்ரீத் பாரத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் புதுக்கோட்டை ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகளை மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் ஓம்பிரகாஷ் மீனா செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் சுமாா் ரூ. 10 கோடி மதிப்பில் அம்ரீத் பாரத் திட்டத்தின் கீழ் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டன.

பெரும்பாலான பணிகள் முடிந்துள்ள நிலையில், மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் ஓம்பிரகாஷ் மீனா அவற்றை செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மீதமுள்ள பணிகளையும் விரைவாக முடிக்க அவா் அறிவுறுத்தினாா்.

அவருடன் சாலைப் பாதுகாப்புத் திட்ட தலைமைப் பொறியாளா் ராஜேஷ்குமாா், முதுநிலை கோட்ட இயக்க மேலாளா் ஆா். சிவா, வணிக மேலாளா் டி.எல். கணேஷ் உள்ளிட்டோரும் உடன் வந்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.