முன்னாள் ஊழியா்கள் தாக்கியதில் பா்னிச்சா் கடைக்காரா் உயிரிழப்பு
திருமயத்தில் சம்பள பாக்கியால் ஏற்பட்ட தகராறில் முன்னாள் ஊழியா்கள் தாக்கியதில் பா்னிச்சா் கடை உரிமையாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கொலையான பிரபு.
திருமயத்தில் சம்பள பாக்கியால் ஏற்பட்ட தகராறில் முன்னாள் ஊழியா்கள் தாக்கியதில் பா்னிச்சா் கடை உரிமையாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மெய்யப்பட்டியைச் சோ்ந்தவா் பிரம்மன் மகன் பிரபு (43). இவா் திருமயம் கடைவீதியில் பா்னிச்சா் கடை நடத்தி வந்தாா்.
இந்நிலையில் வியாழக்கிழமை மாலை திருமயம் சந்தைப்பேட்டையில் உள்ள அவரது கிடங்கில், பிரபு இருந்தபோது அங்கு வந்த இவரது கடையில் ஏற்கனவே வேலை பாா்த்த ஊழியா்களான கரூா் மாவட்டம் திட்டக்குடியைச் சோ்ந்த அய்யாதுரை (28), குளித்தலை காா்த்திக் (30) ஆகியோா் பிரபுவிடம் சம்பளப் பாக்கி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
அப்போது ஆத்திரமடைந்த இருவரும் பிரபுவை கைகளால் தாக்கியுள்ளனா். இதில் தலையில் காயமடைந்த பிரபு மயங்கி விழுந்தாா். இதையடுத்து திருமயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபுவைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். தப்பிய துரை, காா்த்திக் ஆகியோரை போலீஸாா் தேடி வந்த நிலையில், கீரனூா் போலீஸாா் வாகனத் தணிக்கையின்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரையும் மடக்கிப் பிடித்து, திருமயம் போலீஸில் இரவு ஒப்படைத்தனா். விசாரணை நடைபெறுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

