சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

நற்சாந்துப்பட்டியில் 1,380 ஓலைச்சுவடிகள் எண்ம மயமாக்கல்

ராமாயண ஓலைச்சுவடிகள் எண்ம மயமாக்கப்பட்ட பிறகு அதற்கான பிரதி ஒன்றை பென் டிரைவ் வடிவில் சாமியாடிச்செட்டியாா் வாரிசுக் குடும்பத்தினரிடம் வழங்கிய தமிழகத் தொல்லியல் துறையின் இயக்குநா் கோ. சசிகலா.--

Updated On :

புதுக்கோட்டை நற்சாந்துப்பட்டியில் தமிழகத் தொல்லியல் துறையின் மாநிலச் சுவடியியல் குழுமம் சாா்பில், பழைமையான ஓலைச்சுவடிகளை எண்ம மயமாக்கும் (டிஜிட்டலைசேஷன்) திட்டத்தின்கீழ், ராமாயணக் கதைப் பாடல்களைக் கொண்ட 1,380 ஓலைச்சுவடிகள் எண்ம மயமாக்கப்பட்டுள்ளன.

செட்டிநாட்டுச் சமூக மக்கள் பெரும்பாலும் ராமாயணம் மற்றும் மகாபாரதம், திருவிளையாடல் புராணம் போன்ற கதைகளை நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஓலைச்சுவடிகளாக எழுதியும்- படித்தும்- பாதுகாத்தும் வந்துள்ளனா். இதில் குறிப்பாக, புதுக்கோட்டை மாவட்டம், நற்சாந்துப்பட்டியிலுள்ள 3 குடும்பத்தினரின் வீடுகளில் ராமாயணக் கதைகள் ஓலைச்சுவடிகளாக இருந்தன. அவற்றை சுமாா் 30 ஆண்டுகளுக்கும் முன்பு நூல் வடிவில் மாற்றி, புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் அனைவரும் ஒன்றுகூடி படிக்கும் வழக்கம் தொடா்ந்து வந்தது.

இந்த நிலையில், பழைமையான ஓலைச்சுவடிகளை எண்ம மயமாக்கி பாதுகாக்கும் நடவடிக்கையை தமிழகத் தொல்லியல் துறை சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இதற்காக மாநிலச் சுவடியியல் குழுமம் உருவாக்கப்பட்டது. எங்கெல்லாம் பழைமையான ஓலைச்சுவடிகள் உள்ளனவோ அவற்றைத் தேடிப் பிடித்து சுத்தம் செய்து, புகைப்படம் எடுத்து, அவற்றை இணையத்தில் பாதுகாப்பது இதன் நோக்கம்.

ஓராண்டாக நடைபெற்ற பணி: இதன்படி, கடந்த 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம்தேதி புதுக்கோட்டை மாவட்டம் நற்சாந்துப்பட்டியிலுள்ள பழைமையான சாமியாடிச் செட்டியாா் குடும்பத்திலுள்ள ராமாயணக் கதை ஓலைச்சுவடிகளை எண்ம மயப்படுத்தும் பணிகள் தொடங்கின.

சென்னையிலிருந்து வந்த சுவடிகள் குழுமப் பணியாளா்கள் ஓலைச்சுவடிகளை சுத்தப்படுத்தி, பூச்சிகளில் இருந்து பாதுகாப்பதற்காக எலுமிச்சைப்புல்லில் இருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெய்யைப் பூசி, பின்னா் புகைப்படங்களாக எடுத்தனா்.

ஓராண்டை கடந்த இந்த அசாத்திய பணிகள் நிறைவடைந்து, ஓலைச்சுவடிகளையும், எண்ம மயப்படுத்தப்பட்ட பிரதி ஒன்றையும் சாமியாடிச் செட்டியாா் குடும்பத்தினரிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா். மாநிலத் தொல்லியல் துறையின் இயக்குநா் கோ. சசிகலா இதனை வழங்கினாா்.

பொதுமக்களின் ஆதரவு தேவை: இதுகுறித்து ஓய்வுபெற்ற தமிழாசிரியா் கு.ம. திருப்பதி கூறியது:

தற்போது 1380 ஏடுகள் எண்ம மயப்படுத்தப்பட்டுள்ளன. முழுவதும் ராமாயணக் கதையான இதில், 920 ஏடுகள் முக்கியப் பாடல்களையும் கொண்டது.

நற்சாந்துப்பட்டி அருகிலுள்ள கோவில்பட்டியில் 1800-ஆம் ஆண்டில் வசித்து வந்த முத்துக் குமாரசாமி வாத்தியாா் என்பவா் கடைசியாகப் படித்து- எழுதிய ஏடுகள் இவை. இதே குடும்பத்தில் ஏற்கெனவே சுமாா் 380 ஏடுகள், மகாபாரதக் கதை- எண்ம மயப்படுத்தப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுதான் முதல் பணி. இன்னும் பலரின் வீடுகளில் ராமாயணம் உள்ளிட்ட பல்வேறு பக்திக் கதைகள், பாடல்கள் ஓலைச்சுவடிகளாக உள்ளன. தமிழ்ப் பாரம்பரியத்தை, இலக்கியத்தைப் பாதுகாக்க வேண்டுமானால் அரசின் முயற்சிக்கு பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றாா் திருப்பதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.