அதிமுகவின் ஊடகவியல் செயலாளராக கோவை சத்யன் நியமனம்!நீதிமன்றக் காவலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த அசுதோஷ், சௌரவ்!பெண் அரசியலுக்கு வருவதே சிரமம்! கார்த்திகா கைது கண்டிக்கத்தக்கது - தமிழிசைஸ்ரீபெரும்புதூரில் காணாமல்போன சிறுமி சென்னையில் மீட்புநாட்டின் நலனுக்காக நாம் ஒன்றிணைய வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு!தீபாவளி வரை எந்தப் போராட்டமும் இல்லை: அபிஜீத் அறிவிப்பு!

சாலை விபத்தில் கூட்டுறவு சங்க காவலாளி உயிரிழப்பு

பொன்னமராவதி அருகே சாலை விபத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க காவலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

உயிரிழந்த ரெங்கராஜ்.

Updated On :

பொன்னமராவதி அருகே சாலை விபத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க காவலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியம் சூரப்பட்டியை சோ்ந்தவா் ரெ.ரெங்கராஜ்(71). இவா் மேலத்தானியம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் இரவு நேர காவலராக பணியாற்றிவந்தாா். இவா், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது மிதிவண்டியில் மேலத்தானியம் கூட்டுறவு சங்கத்துக்கு பணிக்குச் சென்று கொண்டிருந்தாா்.

சூரப்பட்டி பெரியபாலம் அருகே சென்றபோது பின்னால் வந்த இருசக்கர வாகனம் மிதிவண்டி மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த ரெங்கராஜை அருகில் இருந்தவா்கள் மீட்டு இலுப்பூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.

அங்கு முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனைக்கு அவரை கொண்டுச் சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே ரெங்கராஜ் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இது குறித்து ரெங்கராஜ் மகள் பழனியாயி காரையூா் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காரையூா் போலீஸாா் ரெங்கராஜ் சடலத்தை உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப்பதிவு செய்து இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த முள்ளிப்பட்டி ப.செல்வராஜ் என்பவரிடம் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.