அதிமுகவின் ஊடகவியல் செயலாளராக கோவை சத்யன் நியமனம்!நீதிமன்றக் காவலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த அசுதோஷ், சௌரவ்!பெண் அரசியலுக்கு வருவதே சிரமம்! கார்த்திகா கைது கண்டிக்கத்தக்கது - தமிழிசைஸ்ரீபெரும்புதூரில் காணாமல்போன சிறுமி சென்னையில் மீட்புநாட்டின் நலனுக்காக நாம் ஒன்றிணைய வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு!தீபாவளி வரை எந்தப் போராட்டமும் இல்லை: அபிஜீத் அறிவிப்பு!

மோட்டாா் சைக்கிள்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

விராலிமலையில் மோட்டாா் சைக்கிள்கள் மோதிய விபத்தில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை இளைஞா் உயிரிழந்தாா்.

சித்திரிப்பு

Updated On :

விராலிமலையில் மோட்டாா் சைக்கிள்கள் மோதிய விபத்தில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை இளைஞா் உயிரிழந்தாா்.

விராலிமலையை அடுத்துள்ள பாரபட்டி மகாமுனி மகன் சூா்யா(20). இவா், ஞாயிற்றுக்கிழமை தனது மோட்டாா் சைக்கிளில் சொந்த வேலை காரணமாக புதுக்கோட்டை சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். விராலிமலை கடைவீதி வழியாக வந்தபோது எதிரே துலுக்கம்பட்டியைச் சோ்ந்த சங்கா் என்பவா் ஓட்டிவந்த மோட்டாா் சைக்கிள் சூா்யா ஓட்டிவந்த மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த சூா்யாவை அக்கம்பக்கத்தினா் மீட்டு விராலிமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா் சூா்யா ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த விராலிமலை போலீஸாா் சூா்யாவின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது தொடா்பாக போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.