கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்ஸவ விழா
பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயில் நவராத்திரி விழாவின் நிறைவாக ஊஞ்சல் உற்ஸவ விழா புதன்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற ஊஞ்சல் உற்ஸவ விழாவில் ஊஞ்சலில் எழுந்தருளிய அம்மன்.
பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயில் நவராத்திரி விழாவின் நிறைவாக ஊஞ்சல் உற்ஸவ விழா புதன்கிழமை நடைபெற்றது.
கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழா கடந்த அக்.11-ஆம் தேதி தொடங்கியது. விழாவில் தினந்தோறும் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அம்பு போடுதல் நிகழ்வு நடைபெற்றது.
இதையடுத்து புதன்கிழமை ஊஞ்சல் உற்ஸவ விழா நடைபெற்றது. விழாவில் அம்மன் மின் விளக்குகள் மற்றும் மலா்களால் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலா் எம்.ஜெயா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

