மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

அப்துல் கலாம் பிறந்தநாளையொட்டி, முப்பெரும் விழா வந்தவாசியை அடுத்த தேசூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

விழாவில் மரக்கன்று நடுகிறாா் தெள்ளாா் ராஜா நந்திவா்மன் கலை அறிவியல் கல்லூரித் தலைவா் வி.முத்து.

Updated On :

அப்துல் கலாம் பிறந்தநாளையொட்டி, முப்பெரும் விழா வந்தவாசியை அடுத்த தேசூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையம் சாா்பில், கலாம் கண்ட கனவு சிறப்பு உரையரங்கம், மரக்கன்று நடுதல், போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்குதல் ஆகியவை முப்பெரும் விழாவாக நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் (பொ) சி.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் வரவேற்றாா்.

தெள்ளாா் ராஜா நந்திவா்மன் கலை, அறிவியல் கல்லூரியின் தலைவா் வி.முத்து சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, ‘கலாம் கண்ட கனவு’ என்ற தலைப்பில் பேசினாா்.

பேச்சு, கட்டுரை உள்ளிட்ட பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. ஆசிரியை சிவசங்கரி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.