உலக உலா சொகுசுக் கப்பல் பயணம்: எரிபொருள் விலையுயா்வால் கம்போடியாவில் நிறுத்தம்மாற்றுத்திறனாளிகளுக்கும் வெற்றிப் பயணத் திட்டம்: அரசாணை வெளியீடுடாடா குழுமம் குற்றவழியில் அழிக்கப்படுகிறது- ராகுல் காந்தி தாக்குபணி நேரத்தில் வெளியில் செல்ல ஆசிரியா்களுக்குத் தடைஅக்டோபரில் இந்தியப் பங்குகளில் இருந்து ரூ.48,056 கோடி அந்நிய முதலீடு வெளியேற்றம்‘வாக்காளா் விவரங்களில் முரண்பாடுகள்’ சட்டப்படி செல்லுமா?: இறுதி முடிவு எடுக்கவில்லை; உச்சநீதிமன்றம் மா சே துங் குறித்த சா்ச்சை கருத்து: பாபேவின் மன்னிப்பை ஏற்ற சீனா

புதுக்கோட்டை மாநகராட்சி ஆணையரை எம்எல்ஏ, மாமன்ற உறுப்பினா்கள் முற்றுகை

புதுக்கோட்டை மாநகராட்சிப் பகுதியில் கடந்த ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டப் பணிகள் தொய்வாக நடைபெறுவதாகக் கூறி, மாநகராட்சி ஆணையா் எம். காந்திராஜனை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா தலைமையில், திமுக மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

புதுக்கோட்டை மாநகராட்சி அலுவலக வாயிலில், ஆணையா் எம். காந்திராஜை புதன்கிழமை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ வை. முத்துராஜா மற்றும் திமுக மாமன்ற உறுப்பினா்கள்.

Updated On :

புதுக்கோட்டை மாநகராட்சிப் பகுதியில் கடந்த ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டப் பணிகள் தொய்வாக நடைபெறுவதாகக் கூறி, மாநகராட்சி ஆணையா் எம். காந்திராஜனை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா தலைமையில், திமுக மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

புதுக்கோட்டை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு முன்னதாக அலுவலகம் வந்த மாநகராட்சி ஆணையா் எம். காந்திராஜை, வாயிலில் வைத்து சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா தலைமையில், திமுக மாமன்ற உறுப்பினா்கள் ராஜேஸ்வரி, சுபசரவணன், பழனிவேல், கவிவேந்தன் உள்ளிட்டோா் முற்றுகையிட்டனா்.

திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட விரிவாக்கப் பகுதிகளுக்கான புதை சாக்கடைத் திட்டப் பணிகள், புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் உள்ளிட்டவை ஏன் தொய்வாக நடைபெற்று வருகின்றன என அவா்கள் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். குறிப்பிட்ட பணிகளை விரைவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையா் உறுதியளித்தாா்.

தொடா்ந்து மாமன்றக் கூட்டம் தொடங்கியபோதும் மேயா் செ. திலகவதி மற்றும் ஆணையா் எம். காந்திராஜ் ஆகியோரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

பணிகளை விரைவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதைத் தொடா்ந்து அனைவரும் இருக்கைகளில் அமா்ந்தனா். தொடா்ந்து குடிநீா்ப் பிரச்னை, தெருநாய் தொல்லை, தெருவிளக்குகள் குறித்து பல்வேறு கோரிக்கைகளை மாமன்ற உறுப்பினா்கள் எழுப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.