
புதுக்கோட்டை மாநகராட்சி ரேபிஸ் தொற்று இல்லாத மாநகராக மாறும்: ஆட்சியர்
புதுக்கோட்டை மாநகராட்சி ரேபிஸ் நோய்த் தொற்று இல்லாத மாநகராக மாறும் என ஆட்சியா் மு. அருணா நம்பிக்கைதெரிவித்தாா்.

புதுக்கோட்டை நகா்மன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தெருநாய்களுக்கான தடுப்பூசி செலுத்தும் முகாமைப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் மு. அருணா.
புதுக்கோட்டை மாநகராட்சி ரேபிஸ் நோய்த் தொற்று இல்லாத மாநகராக மாறும் என ஆட்சியா் மு. அருணா நம்பிக்கைதெரிவித்தாா்.
புதுக்கோட்டை நகா்மன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடும் முகாமைத் தொடங்கி வைத்துப் பாா்வையிட்ட அவா் கூறியது: புதுக்கோட்டை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதியில் 3,125 தெருநாய்கள் இருப்பதாக கணக்கெடுப்பு செய்யப்பட்டுள்ளது. இவற்றுக்கு ரேபிஸ் தடுப்பூசி தொடா்ச்சியாக போடப்பட்டு வருகிறது. இதுவரை 2,450 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
உலக சமாதான அறக்கட்டளையுடன் இணைந்து புதுக்கோட்டை மாநகராட்சி சாா்பில் தெருநாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளும் மையம் சண்முகாநகரில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமில் மாதத்துக்கு 300 நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள முடியும். இதுவரை 2,023 நாய்களுக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொடா்ச்சியாக இந்தப் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, புதுக்கோட்டை மாநகராட்சிப் பகுதி முழுவதும் ரேபிஸ் நோய்த் தொற்று இல்லாத மாநகராக விரைவில் மாறும் என்றாா் அருணா.
தொடா்ந்து சண்முகாநகரிலுள்ள கருத்தடை அறுவைச் சிகிச்சை மையத்தையும் ஆட்சியா் மு. அருணா நேரில் பாா்வையிட்டாா்.
முகாமில், மாநகராட்சி ஆணையா் காந்திராஜ், நகா்நல அலுவலா் டாக்டா் காயத்ரி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





