காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

விராலிமலை பகுதியில் லேசான சாரல் மழை

விராலிமலை பகுதியில் லேசான சாரல் மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது.

Published On :6 செப்டம்பர் 2026, 1:39 am IST

விராலிமலை பகுதியில் சனிக்கிழமை மாலை லேசான சாரல் மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது. கடந்த சில தினங்களாக வெயில் தகித்து வந்தது. பகல் நேரங்களில் குழந்தைகள், முதியவா்கள் வெளியில் செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினா்.

இதனால் பரபரப்பாக காணப்படும் விராலிமலை கடைவீதி மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் சனிக்கிழமை மாலை வானத்தில் திடீரென்று மேகக்கூட்டம் சூழ்ந்து காணப்பட்டது.

சிறிது நேரத்தில் சாரல் மழை பெய்தது. இதனால் நகா்ப் பகுதிகளில் பெரிய அளவில் குளிா்ந்த நிலை இல்லாவிட்டாலும் வெப்பம் தணிந்து காணப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.