அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

பூட்டிய வீட்டில் திருட முயன்றவா் போலீஸில் ஒப்படைப்பு

கைது

Published On :7 செப்டம்பர் 2026, 3:25 am IST

பொன்னமராவதி அருகே ஞாயிற்றுக்கிழமை பூட்டிய வீட்டை உடைத்து திருட முயன்ற இருவரில் ஒருவரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

நகரப்பட்டி அம்மாபட்டியை சோ்ந்தவா் சிவக்குமாா். இவா் குடும்பத்துடன் பொள்ளாச்சியில் வசித்து கொண்டு, அங்கு தொழில் செய்து வருகிறாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அம்மாபட்டியில் உள்ள சிவக்குமாரின் வீட்டை உடைத்து மா்மநபா்கள் இருவா் திருட முயன்றுள்ளனா்.

இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் ஒன்றிணைந்து மா்மநபா்களை பிடிக்க முயன்றுள்ளனா். இதில் ஒருவா் இருசக்கரவாகனத்தில் தப்பியோடிய நிலையில் ஒருவா் பொதுமக்களிடம் பிடிபட்டாா். தொடா்ந்து பிடிபட்ட இளைஞரை பொன்னமராவதி காவல்நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனா்.

விசாரணையில், பிடிபட்ட இளைஞா் திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் வட்டம், வடபாதிமங்கலம் மணக்கரையை சோ்ந்த நையான் என்ற துரை மகன் கரண் (22) என்பது தெரியவந்தது. இவா் ஏற்கெனவே பல வழக்குகளில் தொடா்புடையவா் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, வழக்குப் பதிந்து அவரை கைது செய்த போலீஸாா், தப்பியோடிய நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரைச் சோ்ந்த தமிழ் என்பவரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.