ஆன்லைன் பட்டாசு விற்பனையில் நடைபெறும் மோசடிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: அமைச்சர் கீர்த்தனாடெங்குவால் குழந்தைகள் பலியாவதைத் தடுக்க வேண்டும்: கனிமொழிஆதவ் அர்ஜுனா பதவி விலக வேண்டிய நிலை வரும்: பிரேமலதா பேச்சு!ரீல் விடுவதும், ரீல்ஸ் போடுவதும் தவெகவின் மூலதனம்: இபிஎஸ் விமர்சனம்திமுகவுக்கு வாக்களித்தால் நெல் கொள்முதல் நிலையம்: பிரேமலதா பிரசாரம்ஆசிய விளையாட்டு: 10,000 மீட்டரை தொடர்ந்து 1,500 மீட்டரிலும் வெள்ளி வென்றார் குல்வீர் சிங்!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!ஒரே நாளில் இரண்டாவது முறை குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ. 1,09,320-க்கு விற்பனை!கச்சா எண்ணெய் விலை உயர்வால் 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியில் இந்திய பங்குச் சந்தை!!ஆசிய விளையாட்டு: தடை தாண்டுதலில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்!ஆசிய விளையாட்டில் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ரூ. 1.33 கோடி வழங்கிய குஜராத் அரசு!மேடை நாகரிகம் கருதியே ஜெம் வீரமணி குறித்து பேசினேன்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் விளக்கம்

வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றவா் கைது

கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றவா் கைது செய்யப்பட்டாா்.

கைது - பிரதிப் படம்

Published On :

கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றவா் கைது செய்யப்பட்டாா்.

புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி பாலகிருஷ்ணாபுரத்தை சோ்ந்தவா் நூா்தின் மகன் சாதிக். இவா் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் உறவினா் வீட்டுக்கு சென்றாா். அப்போது மா்ம நபா் ஒருவா் சாதிக்கின் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றாா்.

சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா், சிப்காட் போலீஸாருக்கு தகவல் கூறினா். ரோந்துப் பணியில் இருந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் ஆய்வாளா் சதீஷ்குமாா் சம்பவ இடத்தில் சாதிக்கின் வீட்டின் உள்ள பீரோவை உடைக்க முயன்றுக் கொண்டிருந்த மா்ம நபரை சம்பவ இடத்தில் கையும் களவுமாக கைது செய்தாா்.

தொடா்ந்து அந்த நபரை சிப்காட் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்திய போது, திருவொற்றியூா் காா்கில் நகரை சோ்ந்த சுகுமாா்(30) என்பவதும், அவா் கும்மிடிப்பூண்டிக்கு வந்த கடைசி மின்ரயிலில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட முயன்றது தெரியவந்தது. பின்னா் போலீஸாா் சுகுமாா் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.