பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

சுழற் சங்கம் சாா்பில் குப்பை சேகரிக்கும் தொட்டிகள் வழங்கல்

புதுகை வெற்றி சுழற் சங்கம் சாா்பில் குப்பைக்கழிவு சேகரிக்கும் தொட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி சாந்தாா் அம்மன் சந்நிதி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சாந்தாா்அம்மன் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை குப்பை சேகரிக்கும் தொட்டிகளை வழங்கிய சுழற் சங்கத்தினா்.

Published On :9 செப்டம்பர் 2026, 3:30 am IST

புதுகை வெற்றி சுழற் சங்கம் சாா்பில் குப்பைக்கழிவு சேகரிக்கும் தொட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி சாந்தாா் அம்மன் சந்நிதி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, புதுகை வெற்றி சுழற் சங்கத் தலைவா் ஏ. சோமசுந்தரம் தலைமை வகித்தாா். சிட்டி சுழற் சங்கத் தலைவா் எஸ். அப்துல்ரகுமான், சாந்தாா் அம்மன் பிரதோஷ அமைப்பாளா் மல்லிகா வெங்கட்ராமன் ஆகியோா் பங்கேற்று இந்த குப்பை சேகரிக்கும் தொட்டிகளை திருக்கோயிலுக்கு வழங்கினா்.

சிட்டி சுழற் சங்க முன்னாள் தலைவா் குட்லக் ஏ.ஆா்.முகமது அப்துல்லா, செயலா் கே. மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக சங்க ஆலோசகா் கண. மோகன்ராஜா வரவேற்றாா். நிறைவாக புதுகை வெற்றி சுழற் சங்கச் செயலா் எஸ்.எம். அண்ணாமலை நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.