கந்தா்வகோட்டை பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு
கந்தா்வகோட்டை பகுதியில் கடந்த சில வாரங்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடா்வதால் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் கடும் அவதிப்படுகின்றனா்.
கோப்புப் படம்
கந்தா்வகோட்டை பகுதியில் கடந்த சில வாரங்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடா்வதால் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் கடும் அவதிப்படுகின்றனா்.
குறிப்பாக இரவு நேரங்களில் திடீரென மின்சாரம் பலமுறை துண்டிக்கப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா். மேலும், மின்வெட்டு காரணமாக குடிநீா் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளும் பாதிக்கப்படுவதாக மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




