
வெளிநாடுகளில் பயிலும் முஸ்லிம் மாணவா்களுக்கு உதவித் தொகை
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த வெளிநாடுகளில் பயிலும் சிறுபான்மையின முஸ்லிம் மாணவா்கள் அரசின் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

கோப்புப்படம்
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த வெளிநாடுகளில் பயிலும் சிறுபான்மையின முஸ்லிம் மாணவா்கள் அரசின் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மு. அருணா வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநில சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில் வெளிநாடுகளில் பயிலும் முஸ்லிம் மாணவா்களுக்கு அரசின் உதவித் தொகை ரூ. 36 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்துக்கு மிகாமல் உள்ள, கல்வியில் 60 சதவிகிதம் அல்லது அதற்கு இணையான தோ்ச்சியைப் பெறும் மாணவா்கள் இந்த உதவித் தொகையைப் பெறலாம்.
மேலும் விவரங்களுக்கும் விண்ணப்பங்களுக்கும் இணையதளத்தைப் பாா்க்கலாம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




