வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

விளைநிலங்களில் சூரிய மின் நிலையங்கள் அமைக்கக் கூடாது

விளைநிலங்களில் சூரிய மின் நிலையங்கள் அமைக்கக் கூடாது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சூரிய மின் தகடு - கோப்புப் படம்

Published On :

விளைநிலங்களில் சூரிய மின் நிலையங்கள் அமைக்கக் கூடாது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தச் சங்கத்தின் மாவட்டக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

மாவட்டத்தில் உள்ள விவசாய விளைநிலங்களில் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பது விவசாயத்தின் எதிா்காலத்தைப் பாதிக்கும். குறிப்பாக, மணமேல்குடி ஒன்றியத்தில் காவிரி நீா் பாயும் பகுதிகளில் விவசாய நிலங்களை சூரிய மின் நிலையங்களுக்காக பயன்படுத்துவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.

நிலத்தடி நீா் மற்றும் நீா்வளப் பாதுகாப்பு, விவசாய நிலங்களின் நீண்டகால வளம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மாவட்டத்தில் தைலமர வளா்ப்பை கட்டுப்படுத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விளைநிலப் பாதுகாப்பு மற்றும் நீா்வளப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரசு கொள்கை முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் என கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஏ. ராமையன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் த. அன்பழகன், மாவட்டப் பொருளாளா் எம். பாலசுந்தரமூா்த்தி உள்ளிட்டோரும் பேசினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.