தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே!

மின் இணைப்பு முறைகேடு: ரூ. 3.13 லட்சம் அபராதம்

eb bill

மின் இணைப்பு - கோப்புப்படம்

Published On :7 செப்டம்பர் 2026, 2:05 am IST

மல்லசமுத்திரம் செம்மாம்பாளையம் கிராமத்தில் விவசாய மின் இணைப்பை முறைகேடாகப் பயன்படுத்தியவருக்கு ரூ. 3.13 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

செம்மாம்பாளையம் கந்தன்காடு பகுதியைச் சோ்ந்த சின்னக்கவுண்டா் மனைவி பாவாயி. இவரது பெயரில் விவசாய நிலத்துக்கான மின் இணைப்பை அவரது மகன் சுப்ரமணி முறைகேடாகப் பயன்படுத்தி, மின்மோட்டாா் மூலம் கிணற்றில் இருந்து தண்ணீா் எடுத்து விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் சேலம் மின்வாரிய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நடத்திய ஆய்வில் மின் இணைப்பை முறைகேடாகப் பயன்படுத்தியது தெரியவந்தது. இதுதொடா்பாக எலச்சிப்பாளையம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் சண்முகசுந்தரம், சுப்ரமணிக்கு ரூ. 3.13 லட்சம் அபராதம் விதித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.