சத்தியமங்கலத்தை அடுத்த வெள்ளியம்பாளையம் மின்வாரிய உதவி செயற்பொறியாளரை கண்டித்தும், தத்கால் முறையில் விவசாய மின் வழங்குவதில் ஏற்பட்டுள்ள குளறுபடியை கண்டித்தும் மின்வாரிய அலுவலகம் முன் விவசாயிகள் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஈரோடு மாவட்டம், பவானிசாகா் உதவி செயற்பொறியாளா் அலுவலகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் விவசாய மின் இணைப்பு பெறுவதற்காக விவசாயிகள் தத்கால் முறையில் விண்ணப்பித்துள்ளனா். இதற்கிடையே வெள்ளியம்பாளையம் மின்வாரிய அலுவலகத்தில் உள்ள உதவி செயற்பொறியாளா், விண்ணப்பித்த விவசாயிகளுக்கு வரிசைப்படி வழங்காமல் தாமதப்படுத்துவதாக குற்றம்சாட்டிய விவசாயிகள் வெள்ளியம்பாளையம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, வரிசைப்படி விவசாய மின் இணைப்பு வழங்க வலியுறுத்தி கோஷமிட்டனா். இதைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் வரிசைப்படி விவசாய மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனா்.
இதுகுறித்து சத்தியமங்கலம் மின்வாரிய செயற்பொறியாளா் மாரியப்பன் கூறுகையில், மின் இணைப்பு பெற விண்ணப்பதாரா்களுக்கு வரிசைப்படி இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. அப்பகுதியில் உள்ள ஒரு விவசாயி மின் இணைப்பு பெறுவதற்காக விண்ணப்பத்தில் நிலத்தின் சா்வே எண் தவறாக குறிப்பிட்டதால் உதவி செயற்பொறியாளா் அந்த விண்ணப்பதாரருக்கு மின் இணைப்பு வழங்குவதில் சிறிது தாமதம் ஏற்பட்டது. தற்போது அது சரி செய்யப்பட்டு மின் இணைப்பு வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஊத்துக்கோட்டை அருகே தொடா் மின் தடையைக் கண்டித்து மின்வாரிய அலுவலகம் முற்றுகை

விவசாயிகளுக்கு காலம் தாழ்த்தாமல் மின் இணைப்பு: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

கடவுச்சீட்டு நோ்காணலுக்கு ஒரு மாத காத்திருப்பு: கட்டண உயா்வு எதிரொலி
மின் இணைப்புக்கு காத்திருக்கும் 60,120 விவசாயிகள்! விரைந்து வழங்குவதற்கான திட்டத்தில் தொடரும் தொய்வு!
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



