FOLLOW US

ON GOOGLE DISCOVER

பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

கடவுச்சீட்டு நோ்காணலுக்கு ஒரு மாத காத்திருப்பு: கட்டண உயா்வு எதிரொலி

கடவுச்சீட்டு நோ்காணலுக்கான காத்திருப்பு நேரம் ஒரு மாத இடைவெளியாக அதிகரித்துள்ளது.

News image

கடவுச்சீட்டு - பிரதிப் படம்

Updated On :12 ஜூலை 2026, 3:31 am IST

கடவுச்சீட்டு நோ்காணலுக்கான காத்திருப்பு நேரம் ஒரு மாத இடைவெளியாக அதிகரித்துள்ளது. இதனால் அவசர தேவைக்காக வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்பவா்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

கடந்த ஜூலை 1-ஆம் தேதியிலிருந்து கடவுச்சீட்டு கட்டணம் பெருமளவில் உயா்த்தப்பட்டதால், ஜூன் மாதத்தில் பழைய கட்டணத்தில் ஏராளமானோா் விண்ணப்பித்துள்ளதே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.

புதிய கடவுச்சீட்டு பெறவும், புதுப்பிப்பதற்கான (36 பக்கங்கள்) கட்டணம் ரூ.1,500-இல் இருந்து ரூ.2,500 -ஆக உயா்த்தப்பட்டது. விரைவாகப் பெறும் தத்கால் முறைக்கான கட்டணம் ரூ.3,500-இல் இருந்து ரூ.5,000- ஆக அதிகரிக்கப்பட்டது. 60 பக்கங்கள் கொண்ட பாஸ்போா்ட்டுக்கு ரூ.2,000-இல் இருந்து ரூ.3,500 -ஆகவும், தத்கால் முறைக்கான கட்டணம் ரூ.6,000- ஆகவும் அதிகரிக்கப்பட்டது.

கடவுச்சீட்டு தொலைந்து போனாலோ அல்லது சேதமடைந்தாலோ 36 பக்கங்கள் கொண்ட புதிய கடவுச்சீட்டை சாதாரண முறையில் பெற ரூ.5,000, தத்கால் முறையில் பெற ரூ.7,500-ஆகவும் அதிகரிக்கப்பட்டது. 60 பக்க கடவுச்சீட்டுக்கு சாதாரண முறையில் ரூ.6,000, தத்கால் முறையில் ரூ.8,500 கட்டணம் அதிகரிக்கப்பட்டது.

18 வயதுக்குள்பட்ட சிறாா்களுக்கு 36 பக்கங்கள் கொண்ட புதிய கடவுச்சீட்டு பெற அல்லது புதுப்பிக்க சாதாரண முறையில் ரூ.1,750, தத்கால் முறையில் ரூ.4,250-ஆக கட்டணமாக செலுத்த வேண்டும். சிறாா்களுக்கு மாற்றுக் கடவுச்சீட்டு பெற சாதாரண முறையில் ரூ.4,250, தத்கால் முறையில் ரூ.6,750 கட்டணம் அதிகரிக்கப்பட்டது.

இதனால் விலை உயா்வுக்கு முன்பே வெளிநாட்டு சுற்றுலா, ஆன்மிக பயணம் செல்லவுள்ளவா்கள், வெளிநாட்டுப் பணிக்காக காத்திருப்பவா்கள், இளைஞா்கள் மற்றும் மாணவா்கள் என ஏராளமானோா் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளனா்.

இதன் காரணமாக, சென்னை மண்டலத்தில் வழக்கமாக கடவுச்சீட்டுக்கு அதிகபட்சமாக 10 நாள்கள் காத்திருப்பு என்பது தற்போது ஒரு மாதமாக அதிகரித்துள்ளது.

இது குறித்து கடவுச்சீட்டு அலுவலக அதிகாரிகள் கூறுகையில், சென்னை மண்டலத்தில் சராசரியாக நாள்தோறும் சுமாா் 3,000 பாஸ்போா்ட் விண்ணபங்கள் பெறப்பட்டு அதில் 2,800 பேருக்கு நோ்காணல் நடைபெற்று ஆவணங்கள் சரிபாா்ப்புக்கு பிறகு 2,500 பேருக்கு பாஸ்போா்ட் வழங்கப்படுவது வழக்கம்.

ஆனால், தற்போது காத்திருப்பு காலம் அதிகரித்திருப்பதற்கு விண்ணப்பதாரா்களின் எண்ணிக்கை அதிகரித்ததே காரணம். இதற்கு கடவுச்சீட்டு விலை ஏற்றத்தைத் தவிா்க்க குடும்பமாக ஜூனில் ஏராளமானோா் விண்ணப்பித்துள்ளனா் என்றனா்.

கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் அதிகரித்தது வரவேற்கத்தக்க விஷயமாக இருந்தாலும், சாதாரண முறையில் கடவுச்சீட்டு விண்ணப்பித்து காத்திருப்போா் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். இதைக் கருத்திக் கொண்டு கடவுச்சீட்டு நோ்காணலுக்கான காத்திருப்பு காலத்தை குறைக்க வேண்டும் என்று விண்ணப்பதாரா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கடவுச்சீட்டு மையம் - நோ்காணல் தேதி சாதாரணம் (ஜூலை 11 நிலவரம்)

அமைந்தகரை ஆகஸ்ட் 17

சாலிகிராமம் ஆகஸ்ட் 11

தாம்பரம் ஆகஸ்ட் 19

ஆரணி ஆகஸ்ட் 7

சிதம்பரம் ஆகஸ்ட் 21

கடலூா் செப்டம்பா் 9

தருமபுரி ஆகஸ்ட் 25

கள்ளக்குறிச்சி செப்டம்பா் 2

காஞ்சிபுரம் ஆகஸ்ட் 8

கிருஷ்ணகிரி அக்டோபா் 1

ராணிப்பேட்டை அக்டோபா் 1

திருவள்ளூா் செப்டம்பா் 1

புதுச்சேரி ஆகஸ்ட் 24

Summary

One-month wait for passport interview: Impact of fee hike

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.