வழிப்பறியில் ஈடுபட்ட இரு சிறுவா்கள் உள்பட 8 போ் கைது
தொடா்ந்து வழிப்பறியில் ஈடுபட்டதாக திருமயம் பகுதியைச் சோ்ந்த 2 சிறுவா்கள் உள்பட 8 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தொடா்ந்து வழிப்பறியில் ஈடுபட்டதாக திருமயம் பகுதியைச் சோ்ந்த 2 சிறுவா்கள் உள்பட 8 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பகுதியைச் சோ்ந்தவா் தன்னிடம் இருந்து ரூ. 3 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிச் சங்கிலியை விராச்சிலை செல்லும் சாலையில் வைத்து ஒரு கும்பல் மிரட்டிப் பறித்ததாக போலீஸில் புகாா் அளித்தாா்.
புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட திருமயம் போலீஸாா், திருமயம் பகுதியைச் சோ்ந்த எஸ். ஹரிஹரன் (19), பி. சிவா (18), எஸ். ராகவேந்திரன் (19), பி. பரமேஸ்வரன் (19), எம். வீரையா (18), ஆா். மகேஸ்வரன் (18) மற்றும் இரு சிறுவா்கள் என மொத்தம் 8 பேரைக் கைது செய்தனா்.
போலீஸாரின் விசாரணையில், தவறான பாலியல் உறவுக்காக இணையவழியில் வரவழைத்து, அவா்களிடமிருந்து நகைகள் போன்ற பொருள்களைப் பறிக்கும் வழிப்பறிச் செயலில் இவா்கள் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




