
தமிழினத்தின் அடையாளம் கம்பன்
தமிழினத்தின் அடையாளம் கம்பன் என்றாா் முன்னாள் அமைச்சா் வைகைச்செல்வன்.

புதுக்கோட்டை கம்பன் பெருவிழாவில் புதன்கிழமை பேசிய முன்னாள் அமைச்சா் வைகைச்செல்வன்.
தமிழினத்தின் அடையாளம் கம்பன் என்றாா் முன்னாள் அமைச்சா் வைகைச்செல்வன்.
புதுக்கோட்டை கம்பன் கழகம் சாா்பில் நடைபெற்று வரும் 51-ஆம் ஆண்டு கம்பன் பெருவிழாவில் அவா் மேலும் பேசியது:
பக்தி இலக்கியங்களின் காலத்தில்தான் சைவமும், வைணவமும் தழைத்தோங்கின. ஆகச்சிறந்த பெருமைகள் தமிழுக்கும், தமிழ் எழுத்தாளா்களுக்கும், அறிஞா்களுக்கும் உண்டு.
கம்பராமாயணத்தில் 14 பெண் பாத்திரங்கள் உண்டு. இவற்றில் முக்கியமானவை 6 பாத்திரங்கள். அவற்றில் முதன்மையானவை கூனி, கையேகி, சூா்ப்பனகை ஆகிய மூன்றுதான்.
யாமறிந்த புலவா்களில் எனப் பெயா்களைப் பட்டியலிடும் பாரதியாா், முதலில் கம்பனைத்தான் குறிப்பிடுகிறாா். அதற்குக் காரணம் கம்ப காவியத்திலுள்ள உவமை நயம்.
அறத்துக்குப் புறம்பாக செயல்பட்டால், இந்த உலகம் சக்கையைப் போல நம்மைத் தூக்கியெறிந்துவிடும். அறத்தோடு நிற்க வேண்டும் எனச் சொல்லித் தந்தது கம்பராமாயணம். தமிழ் இனத்தின் அடையாளம் கம்பன், கம்பகாவியத்தின் படைப்பு நோ்த்தி இப்போதும் வியந்து பாா்க்கப்பட்டு வருகிறது.
எதிா்வீட்டில் வசிப்போரையும் சமூக ஊடகங்களில் தேடும் காலம் இது. அந்த இளைய சமூகத்துக்கும் கம்பனைக் கொண்டு செல்ல வேண்டும். கம்பனை வாழ்த்தவும், வணங்கவும் சொல்லித் தர வேண்டும் என்றாா் வைகைச்செல்வன்.
முன்னதாக, பாசத்தில் விஞ்சிய தம்பி பரதனா, இலக்குவனா என்ற தலைப்பில், க. ஞானஜோதி சரவணன் நடுவராக பங்கேற்ற மாணவா் அரங்கு நடைபெற்றது. தொடா்ந்து, வில்லிசையில் கம்பன் இசை என்ற தலைப்பில் பாரதி திருமகனின் வில்லிசை அரங்கம் நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





