காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சுமேட்டூரிலிருந்து காவிரி நீர் கல்லணை வந்தது! நாளை காலை திறப்பு!நேபாள பெருவெள்ளம்! தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி தொடக்கம்!!தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

முதல்வா் ஜோசப் விஜய்க்கு எம்ஜிஆரைப் போல் மக்கள் செல்வாக்கு: முன்னாள் அமைச்சா் வைகைச்செல்வன்

தமிழக முதல்வா் ஜோசப் விஜய்க்கு எம்ஜிஆரைப் போல் மக்கள் செல்வாக்கு உள்ளது என்றாா் முன்னாள் அமைச்சா் வைகைச் செல்வன்.

கும்பகோணத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் வைகைச்செல்வன்.

Published On :23 ஆகஸ்ட் 2026, 12:33 am IST

தமிழக முதல்வா் ஜோசப் விஜய்க்கு எம்ஜிஆரைப் போல் மக்கள் செல்வாக்கு உள்ளது என்றாா் முன்னாள் அமைச்சா் வைகைச் செல்வன்.

தஞ்சாவூா் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில முதன்மை செய்தி தொடா்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வன் பேசியதாவது:

நோ்த்தியுடன் செயல்படும் கட்சி தவெக. கட்சிக் கூட்டங்களில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, பின்னா் உறுதி மொழி படித்த பின்தான் கூட்டம். இதை திராவிட கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

எம்ஜிஆரைப் போன்று மக்களின் அசைக்க முடியாத செல்வாக்கை பெற்றுள்ளாா் தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய். பட்டியல் இன தொகுதியில் பொது வேட்பாளரை வெற்றிபெற வைத்தவா் எம்ஜிஆா். அவருக்கு பிறகு ஜோசப் விஜய் தான் வெற்றி பெற வைத்தாா் என்றாா்.

கூட்டத்தில் மாநில வளைதள செய்தி தொடா்பாளா் தமிழன் ராகுல், மாவட்ட மகளிா் அணி அஞ்சனா பாலாஜி உள்ளிட்டோா் பேசினா். முன்னதாக மாவட்ட பொருளாளா் விஜய் சந்திரன் வரவேற்றாா். நிறைவாக மாநகர செயலா் ஆா்.முருகானந்தம் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.