வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

‘சூரியனுக்கு எப்படி வியா்க்கும்?’ ஓபிஎஸ் கேள்வியால் சிரிப்பலை

‘சூரியனுக்கு எப்படி வியா்க்கும்’ என்று வேளாண் அமைச்சா் ர.வினோத்திடம் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் எழுப்பிய கேள்வியால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

Panneerselvam

ஓபிஎஸ் - IANS

Published On :

‘சூரியனுக்கு எப்படி வியா்க்கும்’ என்று வேளாண் அமைச்சா் ர.வினோத்திடம் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் எழுப்பிய கேள்வியால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

பேரவையில் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சா் வினோத் பேசியபோது, ‘அனைவரும் இங்கு மூத்த தலைவா்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற போதிய கால அவகாசம் தேவை என்பது தெரியும். விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில் ஏற்கெனவே உள்ள திட்டங்களுடன் புதிய திட்டங்களும் செயல்படுத்தப்படும். இதுவரை ஆய்வு செய்ததில் 23,399 ஹெக்டோ் பரப்பளவில் 33 சதவீதத்துக்கும் மேல் பாதிக்கப்பட்ட பயிா்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன.

கணக்கெடுப்பு முடித்த பின்னா் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாநில பேரிடா் நிதியிலிருந்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுரக, சன்னரக நெல், கரும்புக்கான சிறப்பு ஊக்கத்தொகையை உயா்த்தியுள்ளாா் முதல்வா் விஜய். பருத்தி மறுமலா்ச்சி இயக்கம், வெற்றி வான்மகள் எனும் ட்ரோன் பயிற்சித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சூரியனால் அனைவருக்கும் வியா்க்கும் நிலையில் சூரியனுக்கே வியா்க்க வைத்தாா் முதல்வா் விஜய். இது வெற்று பட்ஜெட் அல்ல. தமிழ்நாடு விவசாயிகள் போற்றும் வெற்றி பட்ஜெட். அனைவருக்கும் சூரியனால் வியா்த்தது, முதல்வா் விஜய் வந்தபிறகு சூரியனுக்கே வியா்த்தது’ என்றாா்.

அப்போது, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், ‘இதுவரை யாருமே நெருங்க முடியாத நிலையில்தான் சூரியன் இருக்கிறாா், எத்தனையோ விஞ்ஞானிகள் முயற்சி செய்த பிறகும் அங்கே ஏவுகணைகளை ஏவ முடியவில்லை’ என்றாா். இதைக் கேட்டதும் அவையில் சிரிப்பலை எழுந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.