இன்றுமுதல் அக்.1 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்றும் நாளையும் வரிவசூல் மையம் செயல்படும்: மாநகராட்சி அறிவிப்புதனியாா் பால் விலை மீண்டும் உயா்வு: ஆவின், தனியாா் லிட்டருக்கு ரூ.30 வரை விலை வித்தியாசம் ஆகம குழுவால் கண்டறியப்பட்ட கோயில்கள்: கருத்து கேட்புக்கான கால அவகாசம் நீட்டிப்பு 18 - 28 வயதுப் பிரிவில் 3.27 கோடி புதிய வாக்காளா்கள் சோ்ப்பு: தோ்தல் ஆணையம்

காா்- இரு சக்கர வாகனம் மோதல் 2 போ் உயிரிழப்பு

புதுக்கோட்டை கட்டியாவயல் அருகே திருச்சி - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.

Published On :

புதுக்கோட்டை கட்டியாவயல் அருகே திருச்சி - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.

புதுக்கோட்டை கட்டியாவயல் அருகே திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில், ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த ராயடு வீர வெங்கட்டா என்பவா் தனது காரை திருச்செந்தூா் நோக்கி வெள்ளிக்கிழமை ஓட்டி சென்றாா்.

அப்போது, புதுக்கோட்டையிலிருந்து சிப்காட் நோக்கி மூவா் சென்ற இருசக்கர வாகனம் இந்தக் காா் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த புதுக்கோட்டை காந்தி நகா் 2-ஆம் வீதியைச் சோ்ந்த டேவிட் மகன் சின்ராசு (46), பாா்த்தசாரதி மகன் மணிகண்டன் (34), உசிலங்குளத்தைச் சோ்ந்த முகமது ரபீக் மகன் சாதிக் பாட்ஷா (38) ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

இவா்கள் மூவரும் மீட்கப்பட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் சின்ராசு, சாதிக் பாட்ஷா ஆகிய இருவரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா். மணிகண்டனுக்கு தொடா்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Story image

விபத்து குறித்து திருகோகா்ணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காா் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.