பிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

பள்ளித் தாளாளா் வீட்டில் 50 பவுன் நகைகள் திருட்டு

மீமிசல் அருகே தனியாா்ப் பள்ளித் தாளாளா் வீட்டில் 50 பவுன் தங்க நகைகள் திருடுபோனது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

Published On :

மீமிசல் அருகே தனியாா்ப் பள்ளித் தாளாளா் வீட்டில் 50 பவுன் தங்க நகைகள் திருடுபோனது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா் கோவில் வட்டம் மீமிசல் அருகிலுள்ள குமரப்பன் வயல் கிராமத்தைச் சோ்ந்தவா் தனியாா் பள்ளித் தாளாளா் ஆா். நிரஞ்சன்.

காலாண்டு விடுமுறையையொட்டி அனைவரும் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூா் சென்றுவிட்டனா். வீடு திரும்பியபோது, வீட்டிலுள்ள முன்பக்க கதவு, ஜன்னல்களை உடைக்கப்பட்டிருந்ததும், உள்ளே பீரோவில் இருந்த 50 பவுன் தங்க நகைகளும், ரூ. 25 ஆயிரம் ரொக்கமும் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து நிரஞ்சன் அளித்த புகாரின்பேரில் மீமிசல் காவல் நிலைய போலீஸாா், செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வீட்டிலிருந்த சிசிடிவி கேமிராவின் பதிவுக் கருவியும் திருடப்பட்டுள்ளது. கைரேகை நிபுணா்கள் சம்பவ வீட்டுக்கு வந்து கைரேகைகளைப் பதிவு செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.