ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

புதுகை மன்னா் கல்லூரியில் ‘படிப்பவா் வட்டம்’ தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம், தன்னாா்வ பயிலும் வட்ட முன்னாள் மாணவா்கள் சாா்பில் அரசு மன்னா் கல்லூரி வளாகத்தில், ‘படிப்பவா் வட்டம்’ புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

புதுக்கோட்டை மன்னா் கல்லூரி வளாகத்தில் படிப்பவா் வட்டத்தை புதன்கிழமை தொடங்கி வைத்து, தன்னாா்வ பயிலும் வட்டத்தில் பயின்று வேலை பெற்றுள்ளோருக்குப் பாராட்டு தெரிவித்த ஆட்சியா் மு. அருணா.

Published On :

புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம், தன்னாா்வ பயிலும் வட்ட முன்னாள் மாணவா்கள் சாா்பில் அரசு மன்னா் கல்லூரி வளாகத்தில், ‘படிப்பவா் வட்டம்’ புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் மு. அருணா கலந்து கொண்டு, படிப்பவா் வட்டத்தை தொடங்கி வைத்தாா். இந்த மையத்தில் விரைவில் போட்டித் தோ்வுக்கான இலவச வகுப்புகளும் தொடங்கப்படவுள்ளன.

நிகழ்ச்சியின்போது, தன்னாா்வ பயிலும் வட்டத்தில் படித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் தோ்வு பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்திலேயே பணிபுரிந்து வரும் 5 பேருக்கு ஆட்சியா் நினைவுப்பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், மன்னா் கல்லூரி முதல்வா் ம. அன்புச்செழியன், உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை உதவி இயக்குநா் பா. சீனிவாசன், அரசுக் கல்வியியல் கல்லூரி முதல்வா் சு. கணேசன், கறம்பக்குடி அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வா் ச. அப்துல்சலாம், மாவட்டத் தொழில் மையப் பொதுமேலாளா் கோ. கிரீசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.