"உணவுப் பதப்படுத்தல் தொழில் 15 % வளர்ச்சி'
உணவுப் பதப்படுத்தல் தொழில் கடந்த ஆண்டு 15 % வளர்ச்சி அடைந்துள்ளது என்றார்


உணவுப் பதப்படுத்தல் தொழில் கடந்த ஆண்டு 15 % வளர்ச்சி அடைந்துள்ளது என்றார் அத்துறையின் அமைச்சகச் செயலர் ராகேஷ் கக்கர்.
தஞ்சாவூரில் உள்ள இந்திய பயிர் பதன தொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐஐசிபிடி) வெள்ளிக்கிழமை நடைபெற்ற உணவு தொழில்நுட்ப கருத்தரங்கை தொடக்கிவைத்து அவர் பேசியது: இந்தியாவில் உணவுப் பதப்படுத்தல் தொழில் நன்கு வளர்ச்சி அடைந்து வருகிறது. இதற்காக தேசிய உணவு பதப்படுத்தல் இயக்கம் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இது அந்தந்த மாநிலங்களின் சூழலுக்கு ஏற்ப செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வேளாண்மைத் துறை இதன் ஒருங்கிணைப்பு நிறுவனமாக செயல்படுகிறது. உணவுப் பதன தொழிலகங்கள் விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் இணைப்புப் பாலமாக செயல்படுவதால், விளை பொருளுக்கு நல்ல விலையும், நுகர்வோருக்குத் தரமான உணவும் கிடைக்க வாய்ப்புள்ளது. 30 இடங்களில் உணவுப் பூங்கா அமைக்கப்படவுள்ளது. இதில், தமிழகத்திலும், புதுச்சேரியிலும் தலா ஒரு உணவு பூங்கா அமையவுள்ளது என்றார் கக்கர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...