ரயில் பயணிகளிடம் 12 செல்போன்களை திருடிய இளைஞரை ரயில்வே போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.
சிதம்பரம் பாரதி தெருவைச் சேர்ந்தவர் தில்லை நடராஜன் (18). இவருக்கு தந்தையும், தாயும் இல்லை.
இந்நிலையில், தில்லை நடராஜன் கும்பகோணம் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் தூங்கிக் கொணடிருந்தாராம். அப்போது, கும்பகோணம் ரயில்வே புறக்காவல் நிலைய உதவி ஆய்வாளர் தனபால் தலைமையிலான போலீஸார் ரயில் நிலையத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்த தில்லை நடராஜனிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
அவர் முன்னுக்குப் பின் முரணான பதில் கூறியதில் சந்தேகமடைந்த போலீஸார், அவரை விசாரித்ததில் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான 12 செல்போன்களை திருடியதை ஒப்புக்கொண்டார்.
மேலும், அந்த செல்போன்களை கும்பகோணம் ஹாஜியார் தெருவில் உள்ள ஒரு தனியார் செல்போன் கடையில் விற்றது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸார் அவர் திருடிய 12 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இன்று 12 மாவட்டங்களில் மழை! ஓரிரு இடங்களில் 2 -3 டிகிரி வெப்பநிலை அதிகரிக்கும்!

கட்சிகளை அநாகரீக பாதையில் அழைத்துச் செல்பவா்கள் மாறவேண்டும்: அமைச்சா் பெ.விஸ்வநாதன்

அதிமுகவில் அணிமாறிய 3 எம்எல்ஏக்கள்? எஸ்.பி. வேலுமணி தரப்புக்கு பின்னடைவு!

ஐபிஎல் வரலாற்றில் மிகச் சிறந்த பார்ட்னர்ஷிப் இவர்களுடையதுதான்: சுரேஷ் ரெய்னா
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


