வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!தங்கம் விலை தொடர்ந்து 5-ஆவது நாளாக சரிவு!அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 24 மாவட்டங்களில் மழை!திருவண்ணாமலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைவிழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறைவிலங்குகளிலிருந்து பரவும் ‘ஷமோண்டா’ தீநுண்மி: பிரான்ஸில் முதல் மனித பாதிப்புவார இறுதி, முகூா்த்த தினம்: 2,725 சிறப்பு பேருந்துகள் இயக்கம்சென்னையில் ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பில்லை: ஆவின் நிா்வாகம்தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான எந்தவொரு பதவிநீக்க தீா்மானமும் விதிகளின்படி பரிசீலிக்கப்படும்: ஓம் பிா்லாஇன்று சென்னைக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

இலங்கை பிரதமரின் இந்திய வருகையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

இலங்கை பிரதமரின் இந்திய வருகையைக் கண்டித்து தஞ்சாவூர் ரயிலடியில் பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :

இலங்கை பிரதமரின் இந்திய வருகையைக் கண்டித்து தஞ்சாவூர் ரயிலடியில் பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இலங்கையில் நடந்த இன அழிப்பு படுகொலை குறித்தோ, தமிழர்களை அனாதைகளாக விரட்டி பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு வரவழைத்து கொத்துக் கொத்தாகக் கொன்றது பற்றியோ, தமிழர்களை முள்வேலி முகாம்களில் அடைத்து வைத்து அவர்களுடைய வாழ்விடங்களில் ராணுவ முகாம்களை சிங்களர்கள் அமைத்தது குறித்தோ தற்போதைய இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அப்போதைய எதிர்கட்சி தலைவர் என்ற முறையிலும், ஜனநாயக, மனித உரிமை மீறல் என்றோ, தன்நாட்டு மக்கள்தான் தமிழர்கள் என்ற அக்கறை எதுவுமில்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர் என்பதாலும், இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வருவதாலும், அவர் இந்தியா வருவதைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலர் அய்யனாபுரம் சி. முருகேசன் தலைமை வகித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டப் பொருளாளர் என். பாலசுப்பிரமணியன், தமிழ்த் தேசிய பேரியக்க மாவட்டச் செயலர் குழ. பால்ராசு, இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்டத் தலைவர் கே. முத்துக்கிருஷ்ணன், தஞ்சாவூர் மாவட்ட மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோ. ஜயசங்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல் மக்கள் விடுதலை மாநிலக் குழு உறுப்பினர் இரா. அருணாச்சலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.