பௌர்ணமி கிரிவலம்: அக்.25, 26-ல் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்! அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: முதல்வர் விஜய் ஸ்லீப் மோடில் இருந்து வெளியே வருவாரா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்! ஹௌதி தாக்குதல்! சௌதி உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு! சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்!

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்: டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கக் கோரிக்கை

தஞ்சாவூரில் விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் நடைபெறும் நாளன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று இந்து இளைஞர் எழுச்சிப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது

Updated On :

தஞ்சாவூரில் விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் நடைபெறும் நாளன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று இந்து இளைஞர் எழுச்சிப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் பெ. சந்திரசேகரன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் இந்து இளைஞர் எழுச்சிப் பேரவை அமைப்பாளர் பி. ஜெகன்நாத் சிங் அளித்த மனு:

விநாயகர் சதுர்த்தி விழாவின் போது விசர்ஜன ஊர்வலம் நடைபெறும் நாளான்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.

தஞ்சாவூரில் பல இடங்களில் முன்பு விநாயகர் சிலை வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக அந்த இடங்களில் பல்வேறு காரணங்களால் சிலை வைக்கப்படவில்லை. தற்போதும் அந்த இடத்தில் சிலைகள் வைக்க அனுமதி மறுக்கப்படுகிறது. ஆகையால் புதிய இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி கொடுக்காவிட்டாலும், ஏற்கனவே சிலை வைத்த இடங்களில் மட்டும் மீண்டும் சிலை வைக்க அனுமதி வழங்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.