தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கிராம நிர்வாக அலுவலர்கள் தற்செயல் விடுப்புப் போராட்டம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் புதன்கிழமை ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

News image
Updated On :28 டிசம்பர் 2017, 2:52 am

DIN

தஞ்சாவூர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் புதன்கிழமை ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 
தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன் பொது இ-சேவை மையங்கள் தொடங்கப்பட்டன. ஜாதி சான்றிதழ், வருவாய் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை பெற இம்மையங்கள் மூலம் பொதுமக்கள் விண்ணப்பிக்கும் முறை உள்ளது. 
இந்த விண்ணப்பங்கள் இணையவழி மூலம் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு சரிபார்க்கப்பட்டு வருகிறது. இதற்காக கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மடிக் கணினிகள் வழங்கப்பட்டன. ஆனால், அதற்கான இணையதள வசதி, சாதனங்கள் எதையும் அரசு வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், சொந்த செலவில் கிராம நிர்வாக அலுவலர்கள் சாதனங்களை வாங்கியுள்ளது மட்டுமல்லாமல், மாதந்தோறும் இணைய கட்டணத்துக்கான செலவையும் மேற்கொண்டு வருகின்றனராம்.
இதுகுறித்து அரசுக்குப் பல முறை கோரிக்கைகள் விடுக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, இதைக் கண்டித்து, சில வட்டங்களில் வட்டாட்சியர்களிடம் கிராம நிர்வாக அலுவலர்கள் மடிக்கணினிகளை செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து, புதன்கிழமை ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 284 கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.