விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

பாபநாசத்தில் மக்கள் நேர்காணல் முகாம்

பாபநாசம் வட்டம், ஈச்சங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாம் கும்பகோணம் சார் ஆட்சியர் மா.பிரதீப்குமார் தலைமை வகித்தார்.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 2:53 am

DIN

பாபநாசம் வட்டம், ஈச்சங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாம் கும்பகோணம் சார் ஆட்சியர் மா.பிரதீப்குமார் தலைமை வகித்தார்.
 முன்னாள் எம்.எல்.ஏ., எம்.ராம்குமார், சமூக பாதுகாப்புத்திட்ட தனி வட்டாட்சியர்கள் மலர்குழலி, பார்த்தசாரதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
 இதில், 61 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மேலும், முதியோர், மாற்றுத்திறனாளி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா உள்பட 56 பேருக்கு ரூ. 4.86 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
 இதில், மண்டல துணை வட்டாட்சியர்கள் சுந்தரமூர்த்தி, சண்முகம், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் கே.முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.