ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

சிலை கடத்தல் வழக்கில் மேலும் ஒருவருக்கு ஜாமீன்

காஞ்சிபுரம் சிலை கடத்தல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நான்கு பேரில் 3 பேருக்கு ஏற்கெனவே ஜாமீன் கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒருவருக்கு புதன்கிழமை ஜாமீன் வழங்கப்பட்டது.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 2:55 am

DIN

காஞ்சிபுரம் சிலை கடத்தல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நான்கு பேரில் 3 பேருக்கு ஏற்கெனவே ஜாமீன் கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒருவருக்கு புதன்கிழமை ஜாமீன் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஆரியபெரும்பாக்கத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான சுந்தரமூர்த்தி நாயனார் ஐம்பொன் சிலை கடத்தல் தொடர்பாக மகேந்திரன், சேகர், தட்சிணாமூர்த்தி, கார்த்திகேயன் ஆகியோரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
இதுதொடர்பாக கும்பகோணம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இதில், மகேந்திரன், சேகர்,  தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு கடந்த 22-ஆம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டது.   இதைத்தொடர்ந்து, கார்த்திகேயனுக்கு பாலுசெட்டிசத்திரம் காவல் நிலையத்தில் நாள்தோறும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் நீதிபதி புதன்கிழமை ஜாமீன் வழங்கினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.