பாபநாசம் அருகேடெங்கு தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்

பாபநாசம் அருகேயுள்ள தியாகசமுத்திரம் ஊராட்சியில் டெங்கு நோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பிரசாரம் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
Updated on
1 min read

பாபநாசம் அருகேயுள்ள தியாகசமுத்திரம் ஊராட்சியில் டெங்கு நோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பிரசாரம் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
கபிஸ்தலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில்  பொதுமக்களுக்கு டெங்கு நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்,  தியாகசமுத்திரம் கிராமப் பகுதிகளில்  வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. அனைத்து பகுதிகளிலும் டெங்கு  கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கப்பட்டது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் நவீன்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாராயணன் பாலமுரளி, மருத்துவ அலுவலர் கார்த்திகேயன், சுகாதாரஆய்வாளர் சுவாமிநாதன் மற்றும் களப்பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com