மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

குடந்தையில் குற்றவியல் நீதிமன்றம் தொடக்கம்

கும்பகோணத்தில் குற்றவியல் நீதிமன்றத்தின் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 8:14 pm

DIN

கும்பகோணத்தில் குற்றவியல் நீதிமன்றத்தின் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கும்பகோணம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இரண்டாவது குற்றவியல் மற்றும் நீதித்துறை நடுவர் மன்றத்திலேயே இதுவரை குற்றவியல், உரிமையியல் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்தன. 
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி,  கும்பகோணம் குற்றவியல் மற்றும் உரிமையியல் வழக்குகளை தனித்தனியாக விசாரிக்க ஏதுவாக  குற்றவியலுக்கு தனியாக நீதிமன்றம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. இதற்கான தொடக்க விழாவில், தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.கே.நக்கீரன் தலைமை வகித்து,  குத்துவிளக்கேற்றி குற்றவியல் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார்.
விழாவில், மாவட்ட கூடுதல் நீதிபதி ப.உ.செம்மல், தலைமை குற்றவியல்  நீதித்துறை நடுவர் வீ.தேன்மொழி, சார்பு நீதிபதி கே. அய்யப்பன்பிள்ளை, கூடுதல் சார்பு நீதிபதி எஸ். ஜான்சுந்தர்லால்சுரேஷ்,  நீதித்துறை நடுவர் கே. செல்லபாண்டி,  முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி கே.செந்தில்குமார், முதலாவது மாவட்ட உரிமையியல் நீதிபதி எம். ரவிச்சந்திரன், வழக்குரைஞர் சங்கத் தலைவர் ராஜசேகர், செயலாளர் செந்தில்குமார் மற்றும் வழக்குரைஞர்கள், நீதிமன்ற அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.