எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

குடந்தை விவசாயிகள் தில்லி பயணம்

புதுதில்லியில் நடைபெறவுள்ள விவசாயிகளின் பாராளுமன்றத்தில் கலந்து கொள்வதற்காக புதன்கிழமை மாலை கும்பகோணத்தில் இருந்து ரயில் மூலம் விவசாயிகள் தில்லி புறப்பட்டு சென்றனர்.

News image
Updated On :16 நவம்பர் 2017, 1:01 am

DIN

புதுதில்லியில் நடைபெறவுள்ள விவசாயிகளின் பாராளுமன்றத்தில் கலந்து கொள்வதற்காக புதன்கிழமை மாலை கும்பகோணத்தில் இருந்து ரயில் மூலம் விவசாயிகள் தில்லி புறப்பட்டு சென்றனர்.
முன்னதாக, தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுந்தர விமலநாதன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கையில் தேசிய கொடி, நெல் நாற்றுகள் மற்றும் தலையில் விதைநெல் மூட்டைகளுடன் ரயில் நிலையத்திற்கு புதன்கிழமை மாலை கோஷமிட்டவாறு  ஊர்வலமாக வந்தனர்.
இதுகுறித்து சுவாமிமலை விமலநாதன் செய்தியாளர்களிடம் கூறியது:
விவசாயிகளின் தற்கொலைக்கு தீர்வு காண கோரியும், அனைத்து விவசாயிகளும் அனைத்துவித கடன்களில் இருந்து முழுமையாக விடுதலையை பெறவும், விவசாய விளைபொருள்களுக்கு நியாயமான, கட்டுப்படியான விலையை நிர்ணயிக்க கோரியும்,   தமிழக விவசாயிகளின் தலைவர் அய்யாக்கண்ணு கடந்த 141 நாள்களாக  தில்லியில் போராடி வருகிறார். ஆனால், இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் கவலை கொள்ளவில்லை. இதையடுத்து,  நாடு முழுவதும் உள்ள 172 விவசாய அமைப்புகள் ஒன்று கூடி அகில இந்திய விவசாயிகள் போராட்ட குழுவை ஏற்படுத்தி,  அந்தக் குழுவின் தேசிய ஒருங்கிணைப்பாளர்களாக அய்யாக்கண்ணுவையும்,  உத்தரப் பிரதேசத்தை சார்ந்த வி.எம்.சிங் ஆகியோரை தேர்ந்தெடுத்து,  அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புகுழுவின் சார்பில் வரும் 20,  21, 22 ஆகிய தேதிகளில் தில்லி ராம்லீலா மைதானத்தில் விவசாயிகள் நடத்தும் பாராளுமன்றம் நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் இருந்து திரளான  விவசாயிகள் பங்கேற்கிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.