பட்டுக்கோட்டையில் போதை பாக்குகள் விற்றதாக 4 பேர் கைது
பட்டுக்கோட்டையில் உள்ள பெட்டிக்கடைகளில் போதைப் பாக்குகள் விற்றதாக 4 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.


பட்டுக்கோட்டையில் உள்ள பெட்டிக்கடைகளில் போதைப் பாக்குகள் விற்றதாக 4 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
பட்டுக்கோட்டை நகரில் உள்ள பெட்டிக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்யப்படுவது தொடர்பாக காவல்துறையினர் சோதனையிட்டனர். அப்போது மணிக்கூண்டு, வடசேரி சாலை முக்கம், தஞ்சை சாலை, லெட்சத்தோப்பு ஆகிய இடங்களில் உள்ள பெட்டிக்கடைகளில் போதைப் பாக்குகள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.
இதுதொடர்பாக பூமல்லியார்குளம் எம்.கார்த்தி (46), பாளையம் அ.சுதாகர் (21), கே.என்.பாளையம் எம்.முத்துக்குமார் (42), லெட்சத்தோப்பு நைனாங்குளம் பி.சண்முகம் (38) ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...