இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

பேராவூரணி அரசு மருத்துவமனையில்  எக்ஸ்ரே கருவியை இயக்கநடவடிக்கை தேவை: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

பேராவூரணி அரசு மருத்துவமனையில் புதிய எக்ஸ்ரே கருவியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 1:02 am

DIN

பேராவூரணி அரசு மருத்துவமனையில் புதிய எக்ஸ்ரே கருவியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
பேராவூரணியில் அக்கட்சியின் நகர கிளை மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு பாரதி வை.நடராஜன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் கோ.பன்னீர்செல்வம், வி.ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தனர்.
மாநாட்டில்,  கூட்டுறவு அங்காடிகளில் அனைத்துப் பொருள்களும் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.
போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்களுக்கு சென்றுகொண்டிருந்து,  நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும்.
பேராவூரணி பெண்கள் மேல்நிலைப்பள்ளி செல்லும் வழியில் உள்ள மதுபானக்கடையை மூட வேண்டும். பேராவூரணி அரசு மருத்துவமனையில் புதிய எக்ஸ்ரே கருவி அமைக்கப்பட்டிருந்தும் இதுவரை இயக்கப்படவில்லை. உடனடியாக இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள் தேர்வு:  புதிய செயலாளராக எம்.சித்திரவேலு, பொருளாளராக வி.கோபால் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநாட்டில் நிர்வாகிகள் சந்தானம், சுந்தர்ராசு, ஸ்டாலின்பிரபு, ரபிக்முகமது, கண்ணப்பன், சையது முகமதுகனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.